Powered By Blogger

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், காவனூர், வேலூர் மாவட்டம் மாசி மாத தேர் திருவிழா.

காவனூர் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் மாசி மாத திருவிழா.




காவனூர் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் மாசி மாத திருவிழா 21.02.2012 முதல் 10 நாட்கள் வரை மயானகொள்ளை மற்றும்


தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.


வேலூர் மாவட்டம் ஆர்க்காடு வட்டத்தில் ஆர்க்காடு நகரிலிருந்து கண்ணமங்கலம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சுமார் ஏழு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காவனூர் கிராமம். இங்கு எழுந்தருளியுள்ள அருள்மிகு அங்காள அம்மன் திருக்கோயில் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த பத்து நாள் உற்சவத்தில் ஏழாம் நாள் தேர் அன்று லட்சக் கணக்கில் மக்கள் கூடுவர். வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு திருவிழா பக்தி பரவசத்துடன் அமைந்திருக்கும். கோயிலின் சில நிழற்படங்களை இங்கு சமர்ப்பிக்கிறேன். அம்மனின் அருள் பெருக. இந்த ஆண்டு திருவிழா புகைப்படங்கள் விரைவில் பதிவிடுகிறேன்.







அங்காள அம்மன் கோயிலின் முகப்பு தோற்றம்















சிம்ம சிலைகள் நேர்த்தியான வடிவமைப்பு.












சிறிய கோபுரம் இருப்பினும் நேர்த்தியான சிற்பக் கலை. பார்வதி பரமேஸ்வரனுடன், விநாயகர் மற்றும் முருகர் சிலைகள்
























சிம்மம் மற்றும் பலி பீடம். சக்திமிகு அமைப்புகள்.



















பிரதி அமாவாசையில் கிழ்காணும் மண்டபத்தில் அம்மனை ஊஞ்சலில் இட்டு தாலாட்டுவார். காண கண் கோடி வேண்டும்.




























ஆலயத்தின் முகப்பு கோபுர வளைவு. கும்பாபிஷேகத்திற்கு பிறகு.












திரு .சஞ்சீவி ரெட்டியார் அறங்காவலர் குழு சிறப்பான முறையில் புனரமைப்பு செய்தனர். முகப்பு சிலைகளை காவனூர் பரம்பரை கர்ணம் தெய்வத்திரு மா.நாயின பிள்ளை குமாரர்கள் திரு. ந.முருகன், சார் ஆட்சியர் குடும்பத்தினர், திரு.ந.கல்யாணசுந்தரம், யூனியன் வங்கி மேலாளர் குடும்பத்தினர் மற்றும் திரு.ந.சீனிவாசன், ஆய்வாளர், வணிக வரித்துறை குடும்பத்தினர் அன்பளிப்பாக அளித்து கோயிலின் திருப்பணிகளுக்கு உதவினர். இக் குடும்பத்தினர் அருள்மிகு அங்காளம்மன் அருளால் ஆண்டுதோறும் தங்களால் இயன்றதை திருப்பணிகளுக்கு அளித்து வருகின்றனர். இதுபோல் பலர் உதவி செய்து திருக்கோயில் சிறப்பாக உள்ளது.






















சக்தியுகத்தில் சக்தியின் மகிமை அளப்பரியது. அனைவரும் அருள்மிகு அங்காளம்மன் அருளோடு பல்லாண்டு வாழ இறையருளை வேண்டும் அன்பன்,




கா.ந.கல்யாணசுந்தரம்.























சனி, 31 டிசம்பர், 2011

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.













இரண்டாயிரத்து பன்னிரண்டு
அனைவருக்கும் இனிய ஆண்டு !
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
இயற்கை வளமுடன் என்றென்றும்
மானுடம் இனிதே வாழ்ந்து
சமுதாய முன்னேற்றம் காணும்!
நாடும் வீடும் பயனுறும் வண்ணம்
நன்மை மலிந்திடும் ஆண்டு!
பொன்னொளிர் வாழ்வில் அனைவரும்
நிம்மதி பெற்று நித்தம் மேன்மையுற
மனதார வாழ்த்துகிறேன்
இறைவனை வேண்டி !
வாழ்க வளமுடன்!
எல்லாப்புகழும் இறைவனுக்கே!

அன்பன், கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், 13 அக்டோபர், 2011





அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மேல்மலையனூர்



ஒவ்வொரு அமாவாசை நாளன்று அம்மன் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சலில் வைத்து ஆடவைத்து அம்மன் பாடல்கள் பாடப்படுகிறது. லட்சக்கணக்கானோர் அம்மனை தரிசிக்கின்றனர். கண்கொள்ளாக் காட்சி. இதேபோன்று வேலூர் மாவட்டம் காவனூர் கிராமத்திலும் அருள்மிகு அங்காளம்மன் ஊஞ்சல் சேவை பிரதி அமாவாசை நாளில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.


இந்த சேவையில் கோயில் அறங்காவலர் திரு.சஞ்சீவி ரெட்டியார் குழுவினர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அம்மனின் அருள்பெற அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.


அருள்மிகு அங்காளபரமேஸ்வரி ஆலயம்,

காவனூர் கிராமம் & அஞ்சல்,

ஆற்காடு வட்டம், வேலூர் மாவட்டம்,

தமிழ் நாடு.

(ஆர்க்காடு கண்ணமங்கலம் சாலையில் அமைந்துள்ளது )

புதன், 7 செப்டம்பர், 2011

அம்மனின் அருள் பெற அன்போடு அழைக்கிறோம்


பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மேல்மலையனூர் திருக்கோயில் வழிபாட்டு
முறைப்படி, வேலூர் மாவட்டம், ஆர்க்காடு வட்டத்தில் காவனூர் எனும் கிராமத்தில் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் நிறுவப்பட்டது. திருக்கோயிலின் உள்சுற்றுப் பிரகாரத்தில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் புற்று ஒன்று பெரியதாய் அம்மன் சிலைக்குப்பின் வளர்ந்து அதில் நாகம் ஒன்று பிரதி தினம் படையல் பொருட்களில் உள்ள பாலினை அருந்தி வந்தது. மேல்மலையனூர் கோயிலின் அம்சம் பொருந்திய இத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பத்துநாட்கள் பிரம்மோர்ச்சவம் நடைபெர்ருவருகிறது. மாசி அம்மாவாசை முதல் நடைபெறும் இத் திருவிழாவினைக் காண பக்தகோடிகள் பல்லாயிரம் பேர் கூடுவர். அண்மையில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

வேண்டுவோர்க்கு கேட்ட வரம் அளித்து மக்களின் நலம் காக்கும் காவனூர் வாழ் அங்காளம்மனின் சிறப்புகள் பல உண்டு.

பிரதி அம்மாவாசை நாளன்று இரவில் வான வேடிக்கையுடன் அம்மன் திருவூஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அருள் பாலிக்கின்றாள்.

வேலூரில் இருந்து கண்ணமங்கலம் வழியாக சுமார் 35 கிலோ மீட்டரும் , ஆர்க்காடு நகரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிலும் காவனூர் கிராமம் நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டு உள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அரை மணிக்கொன்று இயக்கப்படுகிறது. அனைவரும் அம்மனின் அருள் பெற அன்போடு அழைக்கிறோம்.

திருக்கோயில் நிர்வாகிகள்