காவனூர் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் மாசி மாத திருவிழா.
காவனூர் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் மாசி மாத திருவிழா 21.02.2012 முதல் 10 நாட்கள் வரை மயானகொள்ளை மற்றும்
தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
வேலூர் மாவட்டம் ஆர்க்காடு வட்டத்தில் ஆர்க்காடு நகரிலிருந்து கண்ணமங்கலம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சுமார் ஏழு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காவனூர் கிராமம். இங்கு எழுந்தருளியுள்ள அருள்மிகு அங்காள அம்மன் திருக்கோயில் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த பத்து நாள் உற்சவத்தில் ஏழாம் நாள் தேர் அன்று லட்சக் கணக்கில் மக்கள் கூடுவர். வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு திருவிழா பக்தி பரவசத்துடன் அமைந்திருக்கும். கோயிலின் சில நிழற்படங்களை இங்கு சமர்ப்பிக்கிறேன். அம்மனின் அருள் பெருக. இந்த ஆண்டு திருவிழா புகைப்படங்கள் விரைவில் பதிவிடுகிறேன்.
அங்காள அம்மன் கோயிலின் முகப்பு தோற்றம்
சிம்ம சிலைகள் நேர்த்தியான வடிவமைப்பு.
சிறிய கோபுரம் இருப்பினும் நேர்த்தியான சிற்பக் கலை. பார்வதி பரமேஸ்வரனுடன், விநாயகர் மற்றும் முருகர் சிலைகள்
சிம்மம் மற்றும் பலி பீடம். சக்திமிகு அமைப்புகள்.
பிரதி அமாவாசையில் கிழ்காணும் மண்டபத்தில் அம்மனை ஊஞ்சலில் இட்டு தாலாட்டுவார். காண கண் கோடி வேண்டும்.
திரு .சஞ்சீவி ரெட்டியார் அறங்காவலர் குழு சிறப்பான முறையில் புனரமைப்பு செய்தனர். முகப்பு சிலைகளை காவனூர் பரம்பரை கர்ணம் தெய்வத்திரு மா.நாயின பிள்ளை குமாரர்கள் திரு. ந.முருகன், சார் ஆட்சியர் குடும்பத்தினர், திரு.ந.கல்யாணசுந்தரம், யூனியன் வங்கி மேலாளர் குடும்பத்தினர் மற்றும் திரு.ந.சீனிவாசன், ஆய்வாளர், வணிக வரித்துறை குடும்பத்தினர் அன்பளிப்பாக அளித்து கோயிலின் திருப்பணிகளுக்கு உதவினர். இக் குடும்பத்தினர் அருள்மிகு அங்காளம்மன் அருளால் ஆண்டுதோறும் தங்களால் இயன்றதை திருப்பணிகளுக்கு அளித்து வருகின்றனர். இதுபோல் பலர் உதவி செய்து திருக்கோயில் சிறப்பாக உள்ளது.
சக்தியுகத்தில் சக்தியின் மகிமை அளப்பரியது. அனைவரும் அருள்மிகு அங்காளம்மன் அருளோடு பல்லாண்டு வாழ இறையருளை வேண்டும் அன்பன்,
கா.ந.கல்யாணசுந்தரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக