Powered By Blogger

புதன், 7 செப்டம்பர், 2011

அம்மனின் அருள் பெற அன்போடு அழைக்கிறோம்


பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மேல்மலையனூர் திருக்கோயில் வழிபாட்டு
முறைப்படி, வேலூர் மாவட்டம், ஆர்க்காடு வட்டத்தில் காவனூர் எனும் கிராமத்தில் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் நிறுவப்பட்டது. திருக்கோயிலின் உள்சுற்றுப் பிரகாரத்தில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் புற்று ஒன்று பெரியதாய் அம்மன் சிலைக்குப்பின் வளர்ந்து அதில் நாகம் ஒன்று பிரதி தினம் படையல் பொருட்களில் உள்ள பாலினை அருந்தி வந்தது. மேல்மலையனூர் கோயிலின் அம்சம் பொருந்திய இத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பத்துநாட்கள் பிரம்மோர்ச்சவம் நடைபெர்ருவருகிறது. மாசி அம்மாவாசை முதல் நடைபெறும் இத் திருவிழாவினைக் காண பக்தகோடிகள் பல்லாயிரம் பேர் கூடுவர். அண்மையில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

வேண்டுவோர்க்கு கேட்ட வரம் அளித்து மக்களின் நலம் காக்கும் காவனூர் வாழ் அங்காளம்மனின் சிறப்புகள் பல உண்டு.

பிரதி அம்மாவாசை நாளன்று இரவில் வான வேடிக்கையுடன் அம்மன் திருவூஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அருள் பாலிக்கின்றாள்.

வேலூரில் இருந்து கண்ணமங்கலம் வழியாக சுமார் 35 கிலோ மீட்டரும் , ஆர்க்காடு நகரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிலும் காவனூர் கிராமம் நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டு உள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அரை மணிக்கொன்று இயக்கப்படுகிறது. அனைவரும் அம்மனின் அருள் பெற அன்போடு அழைக்கிறோம்.

திருக்கோயில் நிர்வாகிகள்

4 கருத்துகள்:

  1. Divine information shared piously. God Bless You.

    astuteabode.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. மேல்மலையனூர் கோயிலின் அம்சம் பொருந்திய இத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பத்துநாட்கள் பிரம்மோர்ச்சவம் நடைபெர்ருவருகிறது

    அருட் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. The brahmorchavam festival of Sri Angalamman temple of Kavanur followed by mahasivaraaththiri mayanakollai festival during the month of tamil month Maasi (February - March) is very famous and it should be seen by every devottee and get the blessings of the Sakthi Angaalaparameshwari, Kavanur. My best wishes and this website should be developed with all basic historical informations in future.

    N.Murugan,
    Rtd. Dy.Collector,
    Walajapet, Vellore Dist.

    பதிலளிநீக்கு
  4. தங்களுடைய மேலான கருத்துக்கு மிகவும் நன்றி. இந்த வலைத்தளம் அனைவருடைய ஒத்துழைப்பில் மேலும் பொலிவு பெரும்.
    அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

    பதிலளிநீக்கு